யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக யாழ்.பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக யாழ் வைத்தியசாலை அதிகாரிகளினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எம்.பி.ராமநாதன் அனுமதியின்றி வைத்தியசாலைக்குள் நுழைந்து அதன் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக மன்னார் வைத்தியசாலையின் பணிப்பாளரும் மன்னார் வைத்தியசாலையில் மருத்துவராக கடமையாற்றிய போது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மன்னார் வைத்தியசாலைக்குள் பிரவேசித்து அதன் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்து மன்னார் மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி மன்னார் வைத்தியசாலையில் பிரவேசித்து கர்ப்பிணி பெண் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அவர் இடையூறு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.