ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னாள் நிதியமைச்சருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் பசில் ராஜபக்ஷவை வரவேற்க வருகை தந்திருந்தனர்.
இலங்கைக்கு வருகை தந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ச, எதிர்வரும் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆயத்தங்களை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.