free website hit counter

நாமல் ராஜபக்ச விளக்கமறியல் சிறையில் அடைக்கப்பட்டார் !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனுமாகிய, நாமல் ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதிபதியின் உத்தரவின் பேரில், வரும் செப்டம்பர் 18 ந்திகதி வரை விளக்கமறியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

ஶ்ரீலங்கா விமானத்துறை,  ஏர்பஸ் கொள்வனவு நிதிப்பரிவர்த்தனை தொடர்பில், உளவுத்துறை அதிகாரிகளினால்,   பல மணி நேரம் நடத்தப்பட்ட  விசாரணையில்,  வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு, சிஐஏபிஓசி-யால் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதிபதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் (சிஐஏபிஓசி) சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அளித்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம, நாமல்ராஜபக்சவை விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார். 

ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ஆணைக்குழுவால் தொடங்கப்பட்ட ஒரு விசாரணையின் தொடர்பில், கபில சந்திரசேனா மார்ச் 12 அன்று கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பிணையில் இருந்தபோது, ​​கபில சந்திரசேனா மே 8 அன்று மர்மமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார்; இது தற்கொலையாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக  ஃபோர்ட் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், இரண்டாவது சந்தேக நபரான கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரைக் கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த வழக்கு விசாரணைக்களில், பிரான்சில் உள்ள ஏர்பஸ்ஸின் தாய் நிறுவனத்த் தூதுக்குழு ஆகஸ்ட் முதல் வாரத்தில் இலங்கைக்கு வருகை தந்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் வாக்குமூலங்களை வழங்கியிருந்தமையும் கவனத்திற்குரியது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula