free website hit counter

நாட்டில் வருமானத்தை விட செலவுகள் அதிகம் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாட்டில் தனியார் சேமிப்பு மாத்திரமல்லாது அரசாங்கத்தின் வருமானமும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

உண்மையில் நோக்கும் போது நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்தை விட செலவுகள் அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் முதல் நாள் விவாதத்தில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் உற்பத்திகளை விட நுகர்வு அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினைக்கு இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் பதில் வழங்கப்படவில்லை.இதனால், நிதி சமன் இன்மைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் இதனை செய்யவில்லை என்பதுடன் வரவு செலவுத்திட்டத்திலும் அதனை செய்யவில்லை.தினமும் கிடைக்கும் வருவாயை கொண்டு நடத்தப்படும் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளது எனவும் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: