free website hit counter

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை - 1300 மேலான உயிர்பலி !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐரோப்பாவில் கோடைகாலம் ஆரம்பமான ஜூன் 21 முதல்  வரலாறு காணாத வெப்ப அலை வீசுகிறது. இதன் காரணமாக 1,300 க்கும் மேற்பட்ட கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் முன்னதாக, பிரான்சில் புதன்கிழமை முதல் எதிர்பார்த்ததை விட சுமார் 1,000 க்கும் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு நிகழும் இக்  கொடிய வெப்ப அலை தொடர்ந்து கிழக்கு நோக்கி நகர்ந்து வருவதால், ஐரோப்பாவில் கோடிக்கணக்கான மக்கள் வார இறுதியில் நிலவும் கடுமையான வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை சில நாடுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அறிவித்துள்ளன. இதேவேளை,சுகாதார சேவைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளன.

இதில் கடுமையாக பிரான்ஸ் பாதிப்புக்குள்ளானதாகத் தெரிய வருகிறது. பிரான்சில்  மட்டும் புதன்கிழமை முதல் எதிர்பார்த்ததை விட சுமார் 1,000 கூடுதல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தொலைக்காட்சிக்கு செய்திச் சேவைக்கு அளித்த அறிக்கையில், "ஐரோப்பா பூமியில் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாகும், இது உலக சராசரியை விட இரண்டு மடங்கு வெப்பமடைகிறது . ஆதலினால் தயார்நிலை, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வலுவான சுகாதார அமைப்பு சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், கடும் வெப்பத்தால் ஏற்படும் சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார அமைப்பானது அதன் உறுப்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula