இலங்கையில் அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடும் எண்ணம் ஏதும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகனான விமுக்தி குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தான் அரசியலுக்கு வரப்போவதாய் வெளியாகும் செய்திகளையும் அவர் முழுமையாக மறுத்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள விமுக்தி குமாரதுங்க, பிரபல அரசியல் குடும்பத்தின் வாரிசு ஒருவர் அரசியலுக்கு வரப்போவதாக கடந்தக் காலங்களில் செய்திகள் வெளியாகிருந்தன. இந்த செய்திக்கும் தனக்கும் எந்தவிதமானத் தொடர்புகளும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தாய் நாட்டை தான் நேசிப்பதாகவும், இலங்கையில் அரசியலுக்குள் நுழையும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    