கொலம்பியா மேற்கின் சில பகுதிகளைத் தாக்கிய பெரும் நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளார்கள். கட்டிடங்கள் பல இடிந்து விழுந்ததுடன் பலத்த சேதஅழிவுகளும் ஏற்பட்டுள்ளது.
கொலம்பியாவின் சோகோ பிராந்தியத்தில் உள்ள சான் ஹோசே டெல் பால்மரின் மேற்பரப்பிலிருந்து 100 கி.மீ.க்கும் அதிகமான ஆழத்தில், 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்,உருவானது.
கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்பிரியேலாவின் கூற்றுப்படி, இதுவரை குறைந்தது 111 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 87 பேர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பிராந்தியம் முழுவதும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு டஜன் கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. கொலம்பிய அரசாங்கம் இந்தச் சம்பவத்தை தேசிய அவசரநிலையாக அறிவித்துள்ளது.
கொலம்பியாவின் இந்த பேரிடரில் உதவும் பொருட்டு, பிரான்ஸ், மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பரந்த அளவிலான சர்வதேச மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
