ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5, 20 ஓவர் போட்டி நடக்கவுள்ளது.
ஜூன் 9ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை போட்டிகள் நடக்கிறது. ஜூன் 9 அன்று டெல்லியில் போட்டி தொடங்கும். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ,விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது .
இதனால் இந்த தொடரில் இந்தியா அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .ரிஷாப் பண்ட் ,துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தினேஷ் கார்த்திக் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார் .புதிதாக (அறிமுக வீரர்கள் ) உம்ரான் மாலிக் ,அர்ஷ்தீப் சிங் அணிக்கு தேர்வாகியுள்ளனர்.