இலங்கையில் நடைபெறும் வரையறுக்கப்பட்ட ஓவர் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் அணிக்கு பயிற்சியாளராக இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜே ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஷிகர் தவான் தலைமையிலான அணி, ஒருநாள் போட்டிகளிலும், டி 20 போட்டிகளிலும் விளையாடும்.
இதற்கு முன்னர் இவர் 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பேட்டிங் ஆலோசகராக பணியாற்றியிருந்தார்.
இந்திய அணி ஜூன் 28 ஆம் தேதி கொழும்புக்கு புறப்பட்டு ஜூலை 4 வரை பயிற்சி பெறுவதற்கு முன்பு தனிமைப்படுத்தலுக்கு உட்படும். அதன் பிறகு, ஜூலை 13 ஆம் தேதி கொழும்பில் தொடர் நடைபெறுவதற்கு முன்பு அவர்கள் சாதாரணமாக பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள்.