free website hit counter

16 அணிகள் கொண்ட சுற்றுக்குள் இத்தாலி - Euro 2020

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இத்தாலி அணியின் மானுவல் லோகடெல்லி பிரேஸ் (Manuel Locatelli Brace) சிறப்பாட்டத்தால் சுவிட்சர்லாந்திற்கு எதிராக 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றிப்பெற்று
16 அணிகள் கொண்ட சுற்றுக்கு தகுதி பெற்றது. மானுவல் லோகடெல்லி முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் கோல்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார். புதன்கிழமை ரோமில் நடந்த போட்டியில் சுவிட்சர்லாந்தை விழ்த்தியதன் மூலம் யூரோ 2020 இன் நாக் அவுட் கட்டத்தை எட்டிய முதல் அணியாக இத்தாலி திகழ்கிறது. "நாங்கள் நன்றாக விளையாடினோம், எல்லா நிலையிலும் வெல்ல விரும்பினோம். மேலும் எமது அணியினர் நன்றாகத் தொடங்கினர், ஐந்து நாட்களில் இரண்டாவது ஆட்டத்தை வெல்வது எளிதல்ல" என்று இத்தாலி பயிற்றுவிப்பாளர் ராபர்டோ மான்சினி (Roberto Mancini) இத்தாலியன் ரேடியோடெலிவிஷன் (RAI) இடம் கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction