உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ICC World Test Championship) இறுதி ஆட்டத்திற்கு இந்தியா மற்றும் நியுசிலாந்து இடையில் நடைபெற்று வருகின்றது. அதில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியுசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் (Kane Williamson) இந்தியா அணியினை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.
மழை மற்றும் வானிலை சீரற்ற நிலைமைகளினால் பந்து சுழல்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதினால் இம்முடிவுகள் எட்டப்பட்டது. நியுசிலாந்து அணியினர் சுழல்ப்பந்து வீச்சாளர்கள் இன்றியும் மறுபுறம் இந்தியா இரண்டு உலக தரம் வாய்ந்த சுழல்ப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. ஒரு வேளை இந்தியா நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றிருந்தால் நியுசிலாந்து அணியினை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்திருப்பார்கள். அப்படி நடந்திருந்தால் ஆரம்பத்தில் அதிகப்படியான விக்கெட்களை நியுசிலாந்து இழந்திருக்கும்.
இதுவரை இந்தியா அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 62 ரன்களுக்கு எதுவித விக்கெட் இழப்பின்றி சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
																						
     
     
    