free website hit counter

பேமிலிமேன் 3 ஆழம் பார்க்கும் விஜய்சேதுபதி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் விஜய்சேதுபதி. தமிழகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தப் படத்தில் நடிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார்.

இந்நிலையில் இலங்கைத் தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும்விதமாக ‘தி பேமிலி மேன் 2’ தொடர் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் ‘தி ஃபேமிலி மேன்’ இணையத் தொடரின் மூன்றாம் பாகத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகின்றன. 2-ஆம் பாகத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய், இயக்குனர் ராஜ், டிகே ஆகியோர் விஜய் சேதுபதியை சந்தித்து பேசியதாக மனோஜ் பாஜ்பாய் தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 2-ஆம் பாகத்திலேயே விஜய் சேதுபதியை நடிக்கவைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது தற்போது அம்பளமாகியுள்ளது. ஆனால் அதில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுது. இந்த நிலையில் தி பேமிலி மேன் 3 ஆம் பாகத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக அவருடைய செய்தித் தொடர்பாளர் மூலம் தொடர்ந்து செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன. விஜய்சேதுபதி இதற்கு எந்த அளவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வருகிறது என்று ஆழம்பார்த்து முடிவெடுப்போம் என்று தன்னுடைய செய்தித் தொடர்பாளரிடம் கூறியுள்ளாராம். விரைவில் இதில் விஜய்சேதுபதி என்ன முடிவெடுப்பார் என்று தெரிய வரும் என்கிறார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction