free website hit counter

கமலுடன் செல்ஃபி: ஃபகத் பாசிலின் சென்னை பிரகடனம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மலையாளத் திரையுலகின் அட்டகாசமான ‘நேச்சுரல்’ மற்றும் ‘மெத்தட் ஆக்டர்’ என்று பெயர் பெற்றிருப்பவர் ஃபகத் ஃபாசில். இவரது நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘மாலிக்’ திரைப்படம், மலையாளப் ‘படவுலகின் காட் ஃபாதர்’ என்று புகழப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழிலும் ஃபகத் ஃபாசில் தொடர்ந்து நடித்த் வருகிறார். இதில் அவர் தற்போது நடித்துவரும் தமிழ் படம் கமல் நாயகனாக நடித்துவரும் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே படத்தின் நாயகன் நரேன் ஆகியோர் மூன்று வில்லன்களாக நடித்து வருகின்றனர். இதன் பணிகள் கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு முன்களப் பணிகள் மும்முரமாக நடைபெற்று தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது கமல்ஹாசனுடன் ஃபகத் ஃபாசில் எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது. ஃபகத் ஃபாசில் கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டு “ இறுதியில் கமல்ஹாசனை விக்ரம் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்துவிட்டேன்” என்று பிரகடனம் செய்து பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து டெர்மரிக் மீடியா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் இசையமைப்பாளராக அனிருத், சண்டைக் காட்சிகளின் இயக்குநர்களாக அன்பறிவ் ஆகியோர் பணிபுரியவிருக்கின்றனர். முன்னதாக, படத்தின் பெயரை டீஸர் ஒன்றின் மூலமாக அறிவித்தது படக்குழு. அடுத்து படத்தின் முதல் பார்வை போஸ்டரும் வெளியானது. இந்த முதல் பார்வை போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது கமல் - ஃபகத் ஃபாசில் இடையிலான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction