free website hit counter

சார்பட்டா பரம்பரைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களின் மூலம் அறியப்படாத சென்னையை, தமிழ் சினிமாவில் வெளிக்காட்டியவர். தற்போது அவரது இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கொக்கன், டேன்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்ட பலரது நடிப்பில் ஓடிடியில் வெளியாகியிருக்கும் சார்பட்டா பரம்பரை படம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

அதில் குத்துச்சண்டை போட்டில் இரு பாரம்பரிய குழுவினர் மோதிக்கொள்ளும் காட்சிகளோடு, அந்தக் காலத்து அரசியல் நிகழ்வுகளையும் இயக்குநர் சித்தரித்துள்ளார். மேலும் இந்திய அரசியலில் இன்றைக்கும் பேசப்படும் அவசரநிலை பிரகடனம், அதனால், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி கலைப்பு, அவசர நிலைக்காக போடப்பட்ட மிசாவில் மு.க.ஸ்டாலின் கைது, எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருவது போன்ற அரசியல் நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் சாராயம் விற்பவர்கள் கட்சியில் இணைவது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் “சார்பட்டா பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆரை தவறாகச் சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. கண்டிக்கத்தக்கது. கலை மூலம் உண்மைகளை மறைப்பது வருங்கால தலைமுறைக்கு செய்யும் துரோகம். சார்பட்டா முழுக்க முழுக்க திமுகவின் பிரசார படமாகவே இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கும் விளையாட்டுத்துறைக்கும் எந்ததொடர்பும் இல்லை என்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

விளையாட்டை விடாப்பிடியாய் கைக்கொண்ட எம்.ஜி.ஆர் எத்தனையோ வீரர்களை விளையாட ஊக்குவித்தவர்” எனத் தெரிவித்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த எதிர்ப்புக்கு சமூக வலைதளங்களில். ‘எம்.ஜி.ஆர்., எத்தனை சாராய அதிபர்களையும் ரவுடிகளாக இருந்தவர்களையும் கட்சியில் சேர்த்துகொண்டார் என்பதையும் அவர்களில் பலர் இன்று பல்கலைக்கழக முதலாளிகளாகவும் ‘கல்வித் தந்தைகளாகவும் இருந்து கல்வி வியாபாரம் செய்து வருவதையும். அதை அவர்களுடைய வாரிசுகள் தொடர்ந்து வருவதையும்’ ஆதாரத்துடன் குறிப்பிட்டு அமைச்சர் பூசி மெழுகியதைத் தோலுரித்து வருகிறார்கள்.

- 4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction