free website hit counter

முதல் முறையாக மேக்-அப் துறந்த சூர்யா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சூர்யா தனது பிறந்தநாளில்  இரண்டு பிறந்தநாள் பரிசுகளைத் தன்னுடைய ரசிகர்களுக்குக் கொடுத்துள்ளார்.

'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடந்து வருகிறது. இது சூர்யாவின் 40-வது படம். ஆனால், சூர்யாவின் 39-வது படத்தில் கௌரவ வேடத்தில் சூர்யா நடிக்கிறார் என்று கூறப்பட்டது. அந்தப் படத்தை முன்னாள் பத்திரிகையாளர் தா.செ.ஞானவேல் இயக்கி வந்தார். அதற்கு பெயர் வைக்கப்படாமல் இருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. இதில் வழங்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யாவே நடித்துள்ளார்.

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் தலைப்புடன் கூடிய முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு 'ஜெய் பீம்' எனத் தலைப்பிட்டுள்ளனர். இதில் சூர்யாவுடன் பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்துக்காக முதல் முறையாக துளி மேக்கப் இல்லாமல் சூர்யா நடித்துள்ளதாக இயக்குநர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: