2015 ஜனவரி 1 முதல் 2022 டிசம்பர் 31 வரை இலங்கை வெளிநாடுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து மொத்தமாக 29,922 அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (17) உரையாற்றிய அவர், எவ்வாறாயினும், மேற்படி காலப்பகுதியில் மொத்தமாக 349 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உத்தியோகபூர்வமாக மானியமாக பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான பல்வேறு நிறுவனங்களுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களின் கீழ் இந்த மானியங்கள் பெறப்பட்டதாகவும் ஒப்பந்தத்தின் பிரகாரம் குறித்த காலப்பகுதிக்குள் பயன்படுத்தப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.
2015- 2022 க்கு இடையில் பெறப்பட்ட கடன்கள் மற்றும் மானியங்களின் விவரம் பின்வருமாறு