free website hit counter

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் ஆரம்பம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (18) ஆரம்பம்.
இவ்வாண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்யும் பணி இன்று முதல் (18.01.2023) ஆரம்பமாகவுள்ளது.

குறித்த வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான நிலையில் நாளை மறுதினம் (20.01.2023) வரை நடைபெறவுள்ளது.

மேலும், வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதுவரை தேர்தலுக்காக 29 அரசியல் கட்சிகளும் 52 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: