free website hit counter

யாழ்ப்பாணத்திலும் டெல்டா மாறுபாடு !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொரோனா வைரஸின் இந்திய மாறுபாடான டெல்டா வைரஸ் திரிபு யாழ்ப்பாணத்திற்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொற்றும் வேகம் அதிகமான, டெல்டா மாறுபாடு, இலங்கையில் இதுவரை கொழும்பில் மட்டுமே அடையாளம் காணப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது டெல்டா வைரஸ் திரிபு வடமாகாணத்தில், யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் டெல்டா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக, பிரதி சுகாதார சேவை பணிப்பாளர், மருத்துவ நிபுணர் ​ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பிலியந்தலை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலிருந்து இதுவரை மொத்தம் 38 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், ஆதலால் குறித்த பகுதிகளில் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction