இலங்கையில் நடைமுறையிலுள்ள கோவிட்- 19 பாதுகாப்பு நடைமுறைத் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுபவர்ள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மேலும் 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று புதன்கிழமை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதானவர்களுடன், இத்தகைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதென பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தற்போது வரை, கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை எனவும், இது நேற்றைய கைதுடன் 50,027 ஆக அதிகரித்துள்ளதுதாகவும், இதில் 43,000 பேருக்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், எஞ்சியோருக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.