free website hit counter

சி.எஸ்.கே. கேப்டனாக டோனியின் 200வது போட்டி - நினைவு பரிசு வழங்கிய சி.எஸ்.கே. அணி உரிமையாளர்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
டோனிக்கு சி.எஸ்.கே. அணி உரிமையாளர் சீனிவாசன் நினைவு பரிசு வழங்கினார்.
சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்யுயுள்ளார்.

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200-வது போட்டியாகும். 2010, 2011, 2018 மற்றும் 2021 என 4 முறை டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

2010 மற்றும் 2014-ல் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது.

199 போட்டிகளில் தோனியின் தலைமையில் 120 வெற்றிகளை சென்னை அணி பெற்றுள்ளது. 78 போட்டிகளில் தோல்வி மற்றும் 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், சி.எஸ்.கே. கேப்டனாக 200-வது போட்டியில் களமிறங்கிய எம்.எஸ்.டோனிக்கு சி.எஸ்.கே. அணியின் உரிமையாளர் சீனிவாசன் நினைவு பரிசு வழங்கினார். அணி வீரர்களும் டோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction