free website hit counter

கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டம்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கிறிஸ் கெய்லின் அசத்தலான டி20 ஆட்டத்தை கண்டு வியப்படைந்த நாட்கள் பல கடந்த நிலையில் தனது 41 வது வயதில் தனது பாணியிலான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் தனது சொந்த மண்ணில் இரண்டாவது சர்வதேச டி20 அரைச்சதத்தை பூர்த்திச்செய்துள்ளார். அதாவது இவர் இறுதியாக 2010 இல் உலகக்கோப்பையில் இந்தியாவிற்க்கெதிராக 98 ரன்களை எடுத்திருந்தார். மேலும் டி20 போட்டிகளில் 14000 ரன்களை கடந்த முதல் வீரராக கிறிஸ் கெய்ல் போற்றப்படுகிறார்.

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர் நடைப்பெற்று வருகின்றது. அதில் மூன்று போட்டிகளில் முடிவடைந்த நிலையில் அந்த மூன்று போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. மேலும் முதல் போட்டியில் 10 பந்துகளுக்கு 4 ரன்களையும் இரண்டாவது போட்டியில் 16 பந்துகளுக்கு 13 ரன்களையும் கிறிஸ் கெய்ல் எடுத்திருந்தார். ஆனால் நேற்று நடைப்பெற்றப்போட்டியில் அதற்கீடாக 38 பந்துகளுக்கு 67 ரன்களை (7 ஆறு ஓட்டங்கள் 4 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக) பெற்று வெகுச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். கிறிஸ் கெய்லின் அசத்தலான ஆட்டத்தினால் மேற்கிந்திய தீவுகள் அணி 31 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்களை மட்டும் இழந்து இலகுவாக வெற்றி பெற்றது.

41 வயதுடைய கிறிஸ் கெய்ல், 430 டி20 போட்டிகளில் 14038 ரன்களை எடுத்துள்ளார். இவரது 16 வருட டி20 கிரிக்கெட் அனுபவத்தில் 22 சதங்களையும் 87 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார். 40 வயதினை தாண்டும் கிரிக்கெட் வீரர்கள் ஓய்வுப்பெறும் போது, இளம் வீரர்களின் மத்தியில் இவ்வாறான சாதனைகளை கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் சாதித்து வருகின்றார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction