இலங்கை தேசிய குழாமில் மீதமாகவுள்ள அனைத்து ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கும் சென்ற ஞாயிற்றுக்கிழமை (நேற்று) பி.சி.ஆர் எதிர்மறை முடிவை காட்டியதும்,
பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் புதன்கிழமை வரை தனிமையில் இருக்க வேண்டியிருக்கும், ஏனெனில் இலங்கையணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிராண்ட் ப்ளவர் மற்றும் அணி ஆய்வாளர் ஜி.டி. நிரோஷன் ஆகியோருக்கு சில நாட்களுக்கு முன் பி.சி.ஆர் மூலம் கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இலங்கையணி கெட்டராமா மைதானத்தில் (Khettarama Stadium) உள்ள வசதிகளைப் பயன்படுத்தி மீண்டும் பயிற்சிகளை ஆரம்பிக்க முடியும், அதே நேரத்தில் இந்தியணி சிங்கள விளையாட்டுக் கழகத்தில் (எஸ்.எஸ்.சி) பயிற்சிகளை தொடர்ந்து வருகின்றது. இரு அணிகளுக்கும் இரு வெவ்வேறு ஹோட்டல்கள் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்திய அணியுடன் போட்டிகள் ஆரம்பிக்க முன்னர் இலங்கையணிக்கு மேலும் இடையிடையே இரண்டு பி.சி.ஆர் பரிசோதணைகள் மேற்கொள்ளப்படும். மேலும் இந்தியணி இலங்கை வந்தடைந்ததிலிருந்து உயிரியல் குமிழிக்குள் கொரொனா தொற்றின்றி பாதுக்கப்பாகவுள்ளது.
எனினும் இரு அணிகளும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு நாள் போட்டிகளை விளையாடவுள்ளது.