நவம்பர் மாத மேஷ இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள் கோசார ரீதியான பொதுப் மேபலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின் அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.
மேஷம் : (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன், புதன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றம்:
05.11.2024 அன்று லாப ஸ்தானத்தில் சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.
08.11.2024 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.11.2024 அன்று அஷ்டம ஸ்தானத்தில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.
16.11.2024 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து சூர்யன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இடுக்கண் வருங்கால் நகுக என்பதற்கேற்ப எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனை மனதுக்குள் மறைத்து வெளியில் மகிழ்ச்சியை காண்பிக்கும் திறனுடைய மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் பல வகையிலும் நற்பலன்களை அள்ளித் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். எதிலும் கவனமாக பேசுவது நல்லது. வீண் பழி உண்டாகலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
அசுபதி:
இந்த மாதம் எல்லோரையும் வசீகரிக்கும் பேச்சை வளர்த்துக் கொள்வீர்கள். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.
பரணி:
இந்த மாதம் உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும்.
கார்த்திகை:
இந்த மாதம் லாப ஸ்தானத்தில் இருக்கும் கேதுவின் சஞ்சாரத்தால் தொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள் : 3, 4, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24
ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான மார்ச் மாதப் பலன்களை உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: