free website hit counter

2024 A/L பரீட்சை: பரீட்சை திணைக்களத்திலிருந்து அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போடப்படாது, திட்டமிட்டபடி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து மாத்திரம் பரீட்சை நேர அட்டவணையை பதிவிறக்கம் செய்யுமாறு மாணவர்களிடம் மேலும் கேட்டுக்கொண்டார்.

பரீட்சைக்கான திகதி மார்ச் மாதம் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், தற்போது சமூக ஊடகங்களில் பரீட்சை தொடர்பில் பல தவறான தகவல்கள் பகிரப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

“தயவுசெய்து பரீட்சை திணைக்களம் மற்றும் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் சுற்றறிக்கைகளை மட்டும் பின்பற்றவும். தற்போது பரப்பப்படும் பொய்யான செய்திகளுக்கு பலியாக வேண்டாம்” என்று தேர்வு எழுதும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார். (நியூஸ்வயர்)

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: