free website hit counter

மின்சாரக் கட்டணங்கள் 21.9% குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று அறிவித்துள்ளது.

இலங்கையில் இரண்டு முக்கிய துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2023 நிதியாண்டில் பாரிய இலாபத்துடன் முடிவடைந்த இலங்கை மின்சார சபையின் (CEB) நிதிச் செயற்பாடுகள் பெரும்பாலும் சாதகமானதாகவே உள்ளது. கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை செய்யப்படாத இடைக்கால நிதிநிலை அறிக்கைகள் குழுமத்திற்கு ரூ.75.7 பில்லியன் லாபத்தையும், வாரியத்திற்கு ரூ.61.2 பில்லியனையும் காட்டியது.

அரச வருவாயை உயர்த்துவதற்கான திட்டங்கள் தமக்கு இருப்பதாகக் கூறிய NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து உள்நாட்டு இறைவரி திணைக்களத்துடன் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

கணிதம் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து தற்போது நடைபெற்று வரும் அரசாங்க பாடசாலை தவணை பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.

க.பொ.த (சா/த) 2023 பரீட்சைகள் 2024 மே 06 முதல் 15 வரையிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் 2024 செப்டம்பர் 15 மற்றும் க.பொ.த (உ/த) 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …