இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; பாராளுமன்றத்தில் த.தே.கூ.வால் அனுஷ்டிப்பு!
இறுதி மோதல்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவில் மூன்று பிரிவுகள் முற்றாக முடக்கம்; முள்ளிவாய்க்காலில் நினைவேந்த முடியாது!
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் நேற்று திங்கட்கிழமை இரவு 11.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
த.தே.கூ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினசிங்கம் கொரோனாவால் உயிரிழப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரத்தினசிங்கம் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இணைய வழியாக அனுஷ்டிப்போம்; சுமந்திரன் அழைப்பு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ் மக்கள் அனைவரும் இணைய வழியாக (அதாவது Zoom வழியாக) அனுஷ்டிப்போம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னால் பாரிய சதி: சட்டமா அதிபர்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னால் பாரிய சதி உள்ளதாக சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு தீர்ப்பு நாளை பாராளுமன்றத்தில் முன்வைப்பு!
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாளை செவ்வாய்க்கிழமை சபையில் முன்வைக்கவுள்ளதாக, பாராளுமன்ற தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.