free website hit counter

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் செவ்வாய் (ஜூன் 04) மற்றும் புதன்கிழமை (ஜூன் 05) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் கட்டுரை IV ஆலோசனை மற்றும் இரண்டாவது மீளாய்வு ஆகியவை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயற்குழு கூட்ட நிகழ்ச்சி நிரலில் ஜூன் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.

முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கணிசமான அளவு மழை பெய்து வருவதால், நாட்டின் பல பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) இன்று (மே 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …