free website hit counter

“பல பினாமி வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர்” – மஹிந்த தேசப்பிரிய

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பல பினாமி வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பல சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு முக்கிய வேட்பாளருடன் இணைக்கப்பட்டிருப்பதும், தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு பினாமிகளாகக் காட்டிக் கொள்வதும் வெளிப்படையானது என்றார்.

புதிய விதிமுறைகள் அல்லது அளவுகோல்களின் மூலமே இந்த முறையை மாற்ற முடியும் என மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு மாகாணசபை மற்றும் பொதுத் தேர்தல் வரை நீடிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் குழுவுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் தேர்தல் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இளைஞர்களை தேர்தலில் வாக்களிக்குமாறு வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்வில் மஹிந்த தேசப்பிரிய நேற்று கோட்டை புகையிரத நிலையத்தில் ஈடுபட்டார். (நியூஸ்வயர்)
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: