ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளராக, கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க தனது மகன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச தனது மகனின் வேட்புமனுவை ஏற்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
“தங்கள் மகன் போட்டியிடுவதை யார் எதிர்ப்பார்கள்? நான் விரும்பியதால் அவரை முன்வைத்தேன். ஏனெனில் கட்சி அவரை விரும்பியது” என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெற்றியீட்டுவார் என நம்புவதாக ராஜபக்ச மேலும் தெரிவித்தார். (நியூஸ்வயர்)