ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை (ஜூன் 26) நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
ஜனாதிபதி தனது உரையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிப்பார் என்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு நாட்டு மக்களுக்கு பாரிய நிவாரணத்தை வழங்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.