free website hit counter

உயர்தர சுற்றுலா பயணிகளை ஈர்க்க அரசாங்கம் நோக்கம்: விஜித ஹேரத்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உயர்தர சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் சுற்றுலாத் துறையின் தரத்தையும் அதிகரிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கை இலங்கை அடைந்துள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

"சுற்றுலா துறையில் தரத்தை அதிகரிக்க வேண்டும். சுற்றுலாத்துறையில் தரத்தை அதிகரிப்பதன் மூலம் உயர்தர சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க முடியும். சுற்றுலா என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, இது நமது வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது." அவர் கூறினார்.

சுற்றுலா விசாவில் வரும் சில சுற்றுலாப் பயணிகள் நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்த அமைச்சர், சுற்றுலாத் துறையில் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: