free website hit counter

இலங்கை முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,  முன்னாள் வர்த்தக அமைச்சர்  நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி மஹேன் வீரமன் தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குற்றவாளிகளாகளெனத் தீர்ப்புக் கூறி, கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டள்ளது. 

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும், அதற்கான காரணமான இருவர் மீதும்  இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது. 

குறிப்பிட்ட இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் கொண்ட அமர்வின்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரரும், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இந்த தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு உடனடியாகவே மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், குற்றம்சாட்டபட்ட இருவரும், பொலிஸ் காவலுடன் வெலிகடைச் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் சில பகுதிகளில் மக்கள் வெடிகொழுத்தி மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் அறியவருகிறது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: