free website hit counter

நாட்டின் முக்கிய இடங்களை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு சூட்சுமமாக விற்கிறது: ஹர்ஷன

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் நாட்டின் முக்கிய இடங்களை சூட்சுமமாக விற்பனை செய்து வருதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார். 

நாட்டின் ஒரு அங்குலத்தைக்கூட வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்போவதில்லை எனக்கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திடமிருந்து, நாட்டின் பெறுமதி மிக்க இடங்களைப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே ஹர்ஷன ராஜகருண மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடு ஆபத்தான நிலையில் இருக்கிறது. நாட்டைக் காப்பாற்றுவதற்காக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த வீரர்கள், நாட்டைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு வந்தவர்களிடமிருந்து நாட்டின் வளங்களைப் பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கூட்டப்படாத நேரத்தில், ஊடகங்களுக்குத் தெரியாது. கொழும்பில் கோட்டையில் உள்ள பெறுமதியான இடங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளதாகவும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடமிருந்து மீட்கப்போவதாகக் கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்ததுமே ஷங்கிரில்லா ஹோட்டலுக்கு அருகில் இருந்த இடத்தை விற்பனை செய்தார்கள்.

இந்த நண்பர்களே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாவதற்கு நிதியை செலவிட்டனர். இந்த நண்பர்களை மகிழ்விப்பதற்காக நாட்டின் இடங்களை விற்பனை செய்கிறார்கள். இது தவறாகும்.” என்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: