காமன்வெல்த் பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது.
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற மற்றும் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரபூர்வ இல்லத்திற்கு வரவழைத்து பாராட்டினார். அவர்களுடன் கலந்துரையாடினார்.
இதைத்தொடர்ந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.20 லட்சமும், வெள்ளி பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.10 லட்சமும், வெண்கல பதக்கத்தை கைப்பற்றியவர்களுக்கு ரூ.7½ லட்சமும் ஊக்கத் தொகையாக இந்திய ஒலிம்பிக் சங்கம் வழங்கியது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    