free website hit counter

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகும் - தேர்வுத்துறை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜூலை 7ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் முன்கூட்டியே வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 31-ந் தேதி முடிவடைந்தது. சுமார் 8.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ்-1 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்தது. தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 27-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. http://dge.tn.nic.in மற்றும் http://dge.tn.gov.in என்ற இணையதளங்களில் காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction