free website hit counter

அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி - பணக்காரர்கள் பட்டியலில் அதானியை பின்னுக்கு தள்ளி, 9 இடத்திற்கு முன்னேறினார் முகேஷ் அம்பானி

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
10வது இடத்திலிருந்த தொழிலதிபர் அம்பானி 9வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை நோக்கி வருகிறது.

இந்தநிலையில், உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 10-வது இடத்தில் இருந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சொத்து மதிப்பு சரிவால் பணக்காரர்கள் பட்டியலில் ஒரே வாரத்தில் 3-வது இடத்திலிருந்து 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதானி குழும பங்குகளின் சரிவால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் மளமளவென சரிந்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction