free website hit counter

சர்வதேச யோகா தினம் - துணை ஜனாதிபதி, மத்திய மந்திரிகள், பொதுமக்கள் பங்கேற்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 9-வது சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்னாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் யோகா நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்றார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகாசன நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சென்னை மாமல்லபுரத்தில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். லடாக்கில் உள்ள பங்கோங் டசோ ஆற்றின் அருகே பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

மத்தியபிரதேசத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேபோல், பல்வேறு மாநிலங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி, பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்னவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவ-மாணவியரும், பொதுமக்களும், திரைத்துறை பிரபலங்களும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்றார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: