free website hit counter

முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் - மின்சார வாரியம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மாற்று வழியில் மின்வினியோகம் செய்யப்பட்டது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் சென்னை வந்தபோது விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் மின் தடை ஏற்பட்டது.

அமித்ஷா சென்னை வந்த போது சென்னை விமானம் நிலையத்திற்கு வெளியே மின் தடை ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு வெளியே ஜிஎஸ்டி சாலையில் மின் தடை ஏற்பட்டது. அமித்ஷா வருகையின் போது மின் தடை ஏற்பட்டதை கண்டித்து பாஜகவின் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேவேளை, போரூர் துணை மின்நிலைய உயர்மின் அழுத்த பாதையில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மின் துண்டிப்பு ஏற்பட்டதன் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இரவு 9.34 முதல் 10.12 மணிவரை மட்டுமே மின் தடை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாற்று வழியில் மின்வினியோகம் செய்யப்பட்டது என்று மின்வாரியத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இது திட்டமிட்ட சதி செயல் என்று அரசு மீது பா.ஜனதா கட்சியினர் குற்றஞ்சாட்டினர். ஆனால் மின்தடை ஏற்பட்டதற்கு யாரும் காரணம் இல்லை. மழை காற்று காரணமாக எதேச்சையாக நடந்த சம்பவம் என்று மின் பகிர்மான தலைவர் ராஜேஷ் லக்கானி கூறியிருந்தார். ஒரு மாநிலத்திற்கு மிக முக்கிய வி.ஐ.பி. வரும்போது 24 மணிநேரமும் மின்சாரம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாகும். அதை கடைபிடித்ததாகவும் அவர் கூறி இருந்தார்.

ஆனாலும் அமித்ஷா வருகையின் போது மின் தடை ஏற்பட்டது ஏன் என்பது பற்றி மின்வாரியம் விரிவான விசாரணை மேற் கொண்டது.

இது தொடர்பாக இப்போது அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் மின்சார வாரிய நிர்வாக இயக்குனர் மணி வண்ணன் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
முக்கிய பிரமுகர்கள் (வி.வி.ஐ.பி.) வருகையின் போது அவர்கள் வந்து செல்லும் இடங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை அதிகாரிகள் முன் கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்காக முக்கிய பிரமுகர்கள் வருகையின் போதும், பிரதான அரசு நிகழ்வுகளின் போதும் மின்வாரிய அதிகாரிகள் நிகழ்வு நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து, மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: