இமாச்சல் பிரதேச Kinnaur பள்ளதாக்கில் உள்ள பாலம் ஒன்று நிலச்சரிவால் கீழே விழுந்ததில் 9 சுற்றுலா பயணிகள் பலியாகியுள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தின் Kinnaur மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்போது சாங்லா பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டிருந்த பேட்சேரி பாலம் கீழே சரிந்து விழுந்தது. அச்சமயம் 11 சுற்றுலாப் பயணிகள் வாகனம் ஒன்றில் அவ்வெளியே பயணித்துக்கொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது, இந்த விபத்தின் போது குறைந்தது 9 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததோடு மூன்று பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலச்சரிவில் சுற்றுலாப் பயணிகள் இறந்ததற்கு பிரதமர் அலுவலகம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் வருத்தம் தெரிவித்ததோடு, நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    