அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென் முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
வருகின்ற 27 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென் டெல்லிக்கு வருகிறார். அடுத்தநாளான 28ஆம் திகதி காலை வெளியுறவு அமைச்சர் ஆன்டனிக்கும் பிரதமர் நரேந்திர மோடியுடனா சந்திப்பு நடைபெறுகிறது. பின்னர் அவர் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்த உள்ளதோடு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரையும் சந்திக்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா இடையேயான நட்புறவை சிறப்பாக பேணவும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து நல் உறவை மேலும் வலிமைப்படுத்துவது தொடர்பாக இச்சந்திப்புக்களின் போது கலந்துரையாடப்படுமென குறிப்பிடப்படுகிறது, மேலும் 'குவாட்' அமைப்பின் வாயிலாக இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.