free website hit counter

நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது - அமைச்சர் நம்பிக்கை!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியாவில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு என்பது பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது.

மின்சார உற்பத்திக்குத் தேவையான போதிய நிலக்கரி இருப்பில் இல்லை என்பதால் மின் விநியோகத்தில் குறைபாடு ஏற்பட்டு மின் வெட்டு பிரச்சினை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், அனல்மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான அளவு நிலக்கரி இருப்பதாக நிலக்கரித் துறை தெரிவித்துள்ளது. மின் விநியோகத்தில் இடையூறு எதுவும் ஏற்படாது எனவும் அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி கையிருப்பில் 72 லட்சம் டன் அளவு நிலக்கரி இருப்பதாகவும், இது 4 நாட்களுக்கு போதுமானது கூறப்பட்டுள்ளது. மேலும், கோல் இந்தியா நிறுவனத்திடம் 400 லட்சம் டன்களுக்கு மேல் நிலக்கரி இருப்பு உள்ளதாகவும், அது மின் உற்பத்தி நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி விநியோகம் அனைத்து இடங்களிலிருந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோல் இந்தியா நிறுவனம் உட்பட அனைத்து இடங்களிலிருந்தும் அனல்மின் நிலையங்களுக்கு 2 மில்லியன் டன்களுக்கு மேல் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பை உறுதி செய்ய நிலக்கரி விநியோகம் மேலும் அதிகரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: