free website hit counter

உதவி பேராசிரியர் பணி: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பல்கலைக்கழக மாணியக்குழு!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி படிப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இதற்கு 2023ம் ஆண்டு வரை விலக்கு அளித்து பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு 2021ம்  ஆண்டு முதல் பிஎச்டி(PhD) படிப்பு கட்டாயம் என்கிற நடைமுறையை பல்கலைக்கழக மானியக் குழு(University Grants Commission) கடந்த 2018ம் ஆண்டு கொண்டுவந்தது.  பேராசிரியர் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் சேரும் நபர்களின் தகுதியை உயர்த்தும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது.

அதன்படி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு வருகின்ற 2023ம் ஆண்டு வரை பிஎச்டி கட்டாயம் இல்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .

கொரோனா தொற்று காரணமாக ஆராய்ச்சி மாணவர்கள் குறிப்பட்ட காலத்திற்குள் தங்கள் ஆய்வுகளை முடிப்பத்தில் சிரமம் நிலவுவது தொடர்பாக மாணவர்களிடமிருந்தும் ஆசிரியர் அமைப்புகளிடமிருந்தும் பல்கலைக்கழக மாணியக் குழுவுக்கு கூறப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction