free website hit counter

கோயில்கள் திறப்பு சம்பந்தமாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிபாட்டுத் தலங்கள் அனைத்து நாள்களிலும் திறக்கப்படும் என அறிவித்தார்.

உயர் நீதிமன்றம் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உத்தரவிட்ட பிறகே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், "முதலமைச்சர் வழிகாட்டுதல்படி அனைத்து நாட்களிலும் கோயில்களில் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பல்வேறு தரப்பில் கோரிக்கைகளை பெற்றதையொட்டியே எல்லா நாட்களிலும் கோயில்களை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி தேவையான முகக்கவசம், கிருமி நாசினி, சமூக இடைவெளி குறித்து அறிவுறுத்தல் வழங்கப்படும். அதே நேரம், அர்ச்சனை, பூ, மாலை பழம் வைத்து பக்தர்கள் பூஜை செய்ய அனுமதி கிடையாது.

அத்துடன் பணியாற்றும் அர்ச்சகர்கள், மற்றும் பக்தர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். விசேஷ நாட்களில் கொரோனா பரவாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க அனைத்து திருக்கோவிலுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மக்களின் கோரிக்கைகளை, பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றே முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் ஏராளமான பொதுமக்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்" என்று அமைச்சர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: