free website hit counter

ஈரானியக் குடிமக்களின் அன்றாட வாழ்க்கையை உலகுக்கு அறிமுகப்படுத்திய ​​'பெர்செபோலிஸ்'

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஈரான் தெஹ்ரானில் வளரும் ஒரு பெண்; அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தால்  தனது பதின்பருவத்தில் கஷ்டபடுகிறாள்,

இதிலிருந்து தப்பிப்பதற்காகத் நாட்டை விட்டு வெளியேறுகிறாள். இருப்பினும், அவள் தன் சொந்த ஊரை நினைத்து மிகவும் ஏங்குகிறாள். இவ் ஏக்கங்களை சித்திரக்கதை வரைகலைப் புதினமாக மாற்றியவரே மார்ஜேன் சத்ராபி (Marjane Satrapi) 

பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட ​​'பெர்செபோலிஸ்' எனும் இந்த நாவால் சத்ராபியின் சுயசரிதையை சொல்லும் புதினமாக 2000 - 2003 ஆம் ஆண்டுப் பகுதியில் வெளியானது. இஸ்லாமியப் புரட்சியின் போதும் அதற்குப் பின்னரும் ஈரான் மற்றும் ஆஸ்திரியாவில் அவரது குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவத்தைச் சித்தரிக்கிறது. 

பெர்செபோலிஸ் என்ற தலைப்பு பாரசீகப் பேரரசின் பண்டைய தலைநகரைக் குறிக்கிறது. முதலில் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்ட பெர்செபோலிஸ், பல பிற மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது உலகளவில் 2 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளது என விக்கிபீடியா தெரிவிக்கிறது. 

அடுத்த எட்டு ஆண்டுகளில் அனிமெஷன் திரைப்படமாக உருவாக்கம் பெற்றதுடன் ஆஸ்கார் விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. 

மார்ஜேன் சத்ராபி ஒரு சிறந்த பிரெஞ்சு-ஈரானிய எழுத்தாளர் மட்டுமல்ல; இயக்குநர் மற்றும் சமூக ஆர்வலராகவும் செயற்பட்டவர். 

ஈரானில் ஆட்சிக்கு எதிரான பெண் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கான போராட்டங்களை ஆதரித்தவர் சத்ராபி; மேலும் தனது ஹிஜாபை முறையாக அணியாததற்காக ஒழுக்கக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மகாசா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து, 2022-ல் நடந்த போராட்டங்களைப் பற்றிய சித்திரக் கதைகளின் தொகுப்பான 'பெண், வாழ்க்கை, சுதந்திரம்' என்பதையும் அவர் உருவாக்கினார். 2023-ல், அவர் பாரிஸில் உள்ள ஈரானிய தூதரகத்திற்கு வெளியே ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

தனது ஆக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக ஆட்சியாளர்களிடமிருந்து அச்சுறுத்தல்களும் அவதூறுகளும் வந்ததையும் வெளிப்படுத்திய அவர் தொடர்ந்து குரல் உயர்த்தி வந்தார். அவரின்  2024-ல் பிபிசி-பேட்டிகளில் கூறிய விடயங்கள் : 

"கலைஞர்களாகிய நாம் பணிவுடன் இருக்க வேண்டும், ஆனால் ஒன்றும் செய்யாமல் இருப்பது அதைவிட மோசம், அக்கறையின்றி இருப்பது அதைவிட மோசம்,"  "நான் செய்வது மிகப்பெரியது அல்லது மகத்தானது என்று நான் நினைக்கவில்லை, ஆனால் எனக்கு ஒரு குரல் இருக்கிறது, எனக்கு ஒரு முகம் இருக்கிறது, நான் பிரான்சில் அறியப்பட்டவள், நான் செய்ய வேண்டியதைச் செய்கிறேன்."

"எந்தவொரு சமூகத்திலிருந்தும் கலையையும் கலாச்சாரத்தையும் நீக்கிவிட்டால், அந்தச் சமூகம் வீழ்ச்சியடையும்." 

ஈரானியக் குழந்தைப் பருவத்தை உலகளாவிய நீதிக்கதையாக மாற்றிய ஒரு மாபெரும் கலைஞரான மார்ஜேன் சத்ராபி நேற்று தனது 56வது வயதில் காலமானார். இவரின் இழப்புக்கு பல்வேறு வடிவமைப்புத்துறை சார்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அவர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தில் காட்சித் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர், பெற்றோரின் வற்புறத்தலால் பிரான்ஸ்க்கு திரும்பிச்சென்ற அவர் அங்கு ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள கலைப்பள்ளியில் மேல் படிப்பை தொடர்ந்தார்.  ஒரு சமூகத்திற்காக தன் கலைத்திறமையை நேர்த்தியாகவும் பலம் வாய்ந்ததாகவும் கையாண்டவர் மார்ஜேன் சத்ராபி மறைந்தாலும் அவரின் படைப்புக்கள் அழியாது.

source : BBC

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula