free website hit counter

எலிக்கு சிலை வைத்த கம்போடியா!

வினோதம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கம்போடியா நாட்டில் மாகவா எனும்  ஆப்பிரிக்க ராட்ஸத எலி தனது மோப்ப சக்தியால் வெடிக்காத நிலக்கண்ணி வெடிகளை அகற்ற உதவிய மாபெறும் செயற்பாட்டிற்காக நாயகனாக மாறியுள்ளது.

1960களில் வியட்நாம் போரில் தொடங்கி, பல தசாப்தங்களாக நீடித்த தொடர்ச்சியான மோதல்கள், கம்போடியாவில் மில்லியன் கணக்கான கண்ணிவெடிகளைப் பரப்பிச் சென்றன. நாட்டை பாதுகாக்க வெடிபொருட்களை அகற்றும் பணியில் மாகவா போன்ற பயிற்சி பெற்ற விலங்குகள் பங்காற்றிவருகின்றன.

இந்நிலையில் வெடிகுண்டுகளை மோப்பம் பிடிக்கும் திறமையால் மாகவா1.5 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் இருந்த கண்ணிவெடிகள் மற்றும் பிற வெடிபொருட்களை அகற்றியுள்ளது. 

தனது ஐந்தாண்டு காலப் பணியில் வெற்றிகரமாக இதனை செய்தமையால் வரலாற்றில் சிறந்த வெடிபொருள் மோப்ப எலிகளில் ஒன்றாக மாகவா எலி திகழ்கிறது.

கண்ணிவெடிகளை அகற்றும் பணியை வேகமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றி, ஆயிரக்கணக்கான கம்போடியர்களை நேரடியாகப் பாதிப்பிலிருந்து பாதுகாத்ததை போற்றும் விதமாக கம்போடியா சமீபத்தில் மாகவா எலிக்கு ஏழு அடி உயர சிலையைத் திறந்து வைத்துள்ளது.

1992-ஆம் ஆண்டு முதல் ஏற்கனவே 1,300 சதுர மைல்களுக்கும் அதிகமான நிலப்பரப்பு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், கம்போடியா 2030-ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாறுவதை இலக்கு கொண்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula