free website hit counter

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15ஆம் திகதி வரை அவகாசம்!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வரும் 15ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஜூலை 17ஆம் திகதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி முதல் தொடங்கியது. 

மாணவர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து விண்ணப்பதாரர்களும், உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு வரும் 6ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வரும் 15ஆம் திகதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதன்படி https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வரும் 15ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: