free website hit counter

அரசு அதிகாரிகள் மாட்டினால் டிஸ்மிஸ் - இறையன்பு ஐ.ஏ.எஸ். எச்சரிக்கை !

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு இன்று மாலை வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திக்குறிப்பில், “கொரோனா சிகிச்சை, நிவாரண பணி அலுவலர்கள், நிறுவனங்கள் அரசுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

சில அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் சட்டத்திற்கு புறம்பான வகைகளில் செயல்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறுகளை செய்யும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது பணிநீக்கம் உட்பட துறை ரீதியான நடவடிக்கை கூட எடுக்க நேரிடும். தவறுகள் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அதிகாரிகள் நேர்மையாக பணி செய்ய வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு நிர்ணயம் செய்துள்ளதை விட கூடுதல் விலைகளுக்கு மருந்துகளை விற்பனை செய்வது, அரசின் இலவச சேவைகளுக்கு இலஞ்சம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசின் பணித்துறையில் எந்த நிலையில் பணியாற்றும் அலுவலர் இருந்தாலும், எந்த வகையான நிறுவனமாக இருந்தாலும் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது தனியார் துறைகளும் நேர்மையாகவும், கண்ணியமாகவும் நடக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். பொதுமக்களை அரசு அதிகாரிகளை அரசியல்வாதிகள் மிரட்டினாலோ அல்லது நலத்திட்ட உதவிகளுக்கு உதவிகோரவோ மின்னஞ்சல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மற்றும் தலைமைச் செயலகம் தொலைபேசி எண் 044- 25671764 எண் தொடர்புக் கொள்ளலாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula