இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,
அவ்வகையில் கர்நாடகாவில் வருகின்ற ஜூன் 7ஆம் திகதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கொரோனா பரவல் தீவிரத்தன்மையால் வார இறுதி நாட்களும் இரவு நேர ஊரடங்கும் அமலாக்கப்பட்டிருந்தது. எனினும் தொற்று கட்டுக்குள் வராததால் தொடர்ந்து 15 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனையடுத்து அங்கு வரும் ஜூன் 7 திகதி வரை முழு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போதைய விதிமுறைகள் தொடரும் என்றும் காலை 6.00 மணிமுதல் 10 மணிவரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பாதகவும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.