free website hit counter

சுவிற்சர்லாந்தில் பனிப்பாறைச் சரிவில் மலைக்கிராமம் புதைந்தது !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில்,  ஒரு பெரிய பனிப்பாறை உடைந்து விழுந்ததில், பிளாட்டன் மலை கிராமத்தின் ஒரு பகுதியை பனி, சேறு மற்றும் பாறை வெள்ளம் மூடியது.

நேற்று புதன் கிழமை நடந்த இந்த அனர்த்ததில் ஒருவரைக் காணவில்லை. மேலதிக சேத விபரங்கள் குறித்த தகவல்கள் சேகரிப்படகின்றன.

பிளாட்டன் மலைக் கிராமத்துக்கு  மேலே அமைந்துள்ள 1.5 மில்லியன் கன மீட்டர் பனிப்பாறை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது என்ற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாத தொடக்கத்தில் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டுமென அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். 

வலைஸின் தென்மேற்கு மண்டலத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளின் தகவலின்படி, லோட்சென்டல் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கிராமத்தில் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் பாறை சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்தப் பகுதி ஆபத்தானது என்று மக்களை எச்சரித்து, பள்ளத்தாக்கிற்குள் செல்லும் பிரதான சாலையை மூடிவிட்டு, அவர்களை விலகி இருக்குமாறு வலியுறுத்தியள்ளனர். 

சுவிஸ் ஜனாதிபதி கரின் கெல்லர்-சுட்டர்  "உங்கள் வீட்டை இழப்பது மிகவும் மோசமானது" என்று தனது  X தளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆறுதல்களைத் தெரிவித்திருக்கின்றார். 2023 ஆம் ஆண்டில், கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள பிரையன்ஸ் கிராமத்தில் நடந்த பனிப்பாநைச் சரிவின் பின் நிகழ்ந்த பெரும் பனிப்பாறைச் சரிவாக இது மதிப்பிடப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: