free website hit counter

மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் - 296 பேர் உயிரிழப்பு

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் மத்திய பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 296 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த நிலநடுக்கத்தால் சுமார் 155 பேர் வரை காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மொரோக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் இன்று அதிகாலை 03.14 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி, நேற்று நள்ளிரவு 11.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் மராகேஷுக்கு தென்மேற்கே 71 கி.மீ. (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளபட்டு வருகின்றன.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: